- பங்கூனி உத்தர விழா
- திருக்கட்டுப்பள்ளி முருகன் கோயில்
- Thirukattupalli
- தண்டாயுதபாணி சுவாமி கோயில்
- திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்
- தீ மிதி திருவிழா
திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 23: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திர விழா தொடக்கமாக கொடி மரம் நடும் நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் தீமிதி திருவிழா கொண்டாடப்படும்.
நிகழாண்டும் பங்குனி உத்திர தீ மிதி திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு காலை சுவாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்து, கொடி மரத்திற்கு அலங்கார ஆராதனைகள் செய்து கோயில் அர்ச்சகர் செம்மேனிநாத சிவாச்சாரியார் கொடி மரத்தை நட்டார். இறுதியாக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
