×

திருமண விழா போன்று நடந்த தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

 

 

மானாமதுரை, மார்ச் 23:பட்டு வேட்டி தாரை தப்பட்டை கரகாட்டத்துடன் கலக்கலாக மானாமதுரையில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் பொதுமக்களை வெகுவாக ஈர்த்தது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் நடக்கிறது. மானாமதுரையில் நேற்று தேர்தல் நடத்தும் வருவாய்த்துறை அலுவலர்களில் ஆண்கள் பட்டு வேட்டி சட்டையிலும், பெண்கள் பட்டுச் சேலைகள் அணிந்து தாரை தப்பட்டை கரகாட்டம், பட்டாசுகள் வெடித்து திருமண சீர் வரிசையுடன் மானாமதுரை வட்டத்தைச் சார்ந்த கொன்னக்குளம், ராஜகம்பீரம், மிளகனூர் ஆகிய வருவாய் கிராமங்களில் நேரடியாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
மேலக்கொன்னக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் தாய்மாமன் சீர் வரிசை ேபால தட்டுகளில் வாழைப்பழம், மஞ்சள், இனிப்பு, பழங்கள், வெள்ளாடு போன்றவற்றை சீர்வரிசையாக எடுத்து வந்தனர். மானாமதுரை சட்டமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், துணை ஆட்சியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் வருவாய்த் துறையினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை பொதுமக்கள் வெகுவாக ரசித்தனர்.

Tags : Manamadurai ,Tamil Nadu Assembly ,Manamadurai… ,
× RELATED சென்னை மாவட்டத்தில் உள்ள...