×

வாக்களிப்பது ஜனநாயக கடமை விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தல்

 

 

பரமக்குடி, மார்ச் 23: பரமக்குடி நகராட்சி சார்பாக தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் பரமக்குடி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் தாமரை தலைமை தாங்கினார். துணை வட்டாட்சியர் மஞ்சுளா, தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் ராமர் முன்னிலை வகித்தனர். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்கு செலுத்துவது கடமை
மட்டுமல்ல அது ஜனநாயகத்தின் பெருமை என்பதை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
பின்பு பேருந்து நிலைய கடை வியாபாரிகள் மற்றும் பயணிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மதன்குமார், ஜெகதீசன், வட்டாட்சியர் அலுவலக தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திக், சுகாதார மேற்பார்வையாளர்
கள் குமார், வேலாயுதம்,சதீஷ் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பொது
மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Paramakudi ,Paramakudi Municipality ,Paramakudi Bus Stand ,Municipal Commissioner ,Thamarai ,Deputy ,Tahsildar Manjula ,Election Division ,Special ,Tahsildar Ramar ,
× RELATED சென்னை மாவட்டத்தில் உள்ள...