- ராமேஸ்வரம்
- ராமர் பாதம் கோயில்
- ராமேஸ்வர ராமநாதசுவாமி கோவில்
- கெண்டமதன் பர்வதம்
- இராமநாத சுவாமிகள்
- கோவில்
ராமேஸ்வரம், மார்ச் 23: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான ராமர் பாதம் கோயில் கெந்தமாதன பர்வதம் பகுதியில் அமைந்துள்ளது. ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்தபின் சுமார் 2.5 கி.மீ தூரத்தில் உள்ள ராமர்பாதம் கோயில் சென்று தரிசனம் செய்வது வழக்கம். இக்கோயிலுக்கு செல்லும் சாலையில் மணல் குவியல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வடகாடு சாலை பிரிந்து செல்லும் பகுதியில் வாகன புதைந்து செல்லும் அளவிற்கு மணல் குவிந்து கிடக்கிறது. ஒருவார காலமாக கிடக்கும் இந்த மணல் குவியலால் இருசக்கர வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பக்தர்களை ஏற்றி வரும் வாடகை ஆட்டோக்கள் மணலில் சிக்கி திணறி செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். இதனால் சாலையில் தேங்கி கிடக்கும் மணல் குவியலை உடனே அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
