- வைகை ஆறு
- உலக நீர் தினம்
- மதுரை
- யானைப் பாலம்
- வைகை நதி மக்கள் இயக்கம்
- நிர்வாகி
- வைகை ராஜன்
- அண்ணாதுரை
- பார்த்தசாரதி
- மணிகண்டன்
மதுரை, மார்ச் 23: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, யானைக்கால் கல்பாலம் பகுதியில் வைகை ஆற்றை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி வைகை நதி மக்கள் இயக்க நிர்வாகி வைகை ராஜன் தலைமையில் நடைபெற்றது. சமூக ஆர்வலர்கள் அண்ணாத்துரை, பார்த்தசாரதி, மணிகண்டன், ஆறுமுகம், ஆழ்வார்ராஜா, ரமணி, மகேந்திர வர்மன், சங்கரபாண்டியன், வழிகாட்டி மணிகண்டன் உளளிட்ட பலர் கலந்து கொண்டனர். வைகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுருங்கி வருவதால் வெள்ளத்தைக் கடத்தும் திறன் குறைந்துள்ளது.
எனவே, ஜிஐஎஸ் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆற்றின் எல்லைகளைத் துல்லியமாக வரையறுக்க வேண்டும். ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும் கட்டுமானங்கள் இல்லாத பசுமை மண்டலங்களை உருவாக்கவும் வேண்டும்.
அரசின் கொள்கைகளால் மட்டும் ஆற்றைக் காக்க முடியாது. நகரத் திட்டமிடலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக பொறுப்புள்ள அமைப்புகளை உள்ளடக்கிய ‘வைகை கண்காணிப்புக் குழுவை’ உருவாக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நதி ஆரோக்கிய தணிக்கை நடத்தி, நதிப் பாதுகாப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
