திருப்பூர், மார்ச் 23: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதை தொடர்ந்து திருப்பூர் மாநகரில் 156 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. நடத்தை விதிகளில் படி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. தற்காப்பிற்காக துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஒப்படைக்க வேண்டுமென கூறியிருந்தனர். அதன் படி திருப்பூர் மாநகரில் 226 துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டிருந்தது. அதில் 60 துப்பாக்கிகள் வங்கி பயன்பாட்டிற்கு உள்ளது. 156 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டது. இன்னும் 10 துப்பாக்கிகள் ஒப்படைக்காமல் உள்ளது. ஒப்படைக்காமல் உள்ள துப்பாக்கிகளை உரிமையாளர்களை ஒப்படைக்க வைப்பதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
