- காங்கிரஸ்
- தேர்தல் அறிக்கை குழு
- திருப்பூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருப்பூர் பெருநகர மாவட்ட காங்கிரஸ்
- பெருநகர மாவட்டம்
- ஜனாதிபதி
- கோபாலசாமி
- வடக்கு மாவட்டம்
- ஜனாதிபதி...
திருப்பூர், மார்ச் 23: தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு கருத்து கேட்பு கூட்டம் நேற்று மாலை திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் கோபால்சாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், தெற்கு மாவட்ட தலைவர் கிட்டுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு திருப்பூர் மாவட்ட பொறுப்பாளருமான கண்ணன் கலந்து கொண்டு நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சிகள் பொதுமக்களிடம், தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தார்.
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என்பது உள்பட ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை உள்பட பலர் பல்வேறு கோரிக்கைகள் தெரிவித்தனர். இதில் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சந்தீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
