- திமுகா
- திமுக தேர்தல் ஆலோசனை கூட்டம்
- தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்
- ஓ பன்னீர் செல்வம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- கே. மக்கள்
- ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் திமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘சிறந்த முதலமைச்சராக தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கும் மு.க.ஸ்டாலின், மீண்டும் முதல்வராக வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தல் அடிப்படை பணியினை திமுகவினர் துவக்கி விட்டனர். அதேநேரம் உதயக்குமார் கடப்பாரை எடுத்து வர, எடப்பாடி மண்வெட்டி எடுத்து வந்து குழி தோண்டி அதிமுக கட்சியை புதைத்து விட்டனர்.
நான் 4 வருடங்களாக சட்டப்போராட்டம் நடத்தி அசந்து போனேன். முதல்வரின் இதயத்தில் இடம் பிடித்ததால் லட்சோப லட்சம் தொண்டர்களுடன் திமுகவில் இணைந்தோம். திமுக தேர்தல் அறிக்கை வெளியாகும் நாளில், யாராக இருந்தாலும் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என பறந்தோடி விடுவர்’’ என்றார். முன்னதாக ஓபிஎஸ் அளித்த பேட்டியில், ‘‘இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழ்நிலையில், திமுகவுடன் போட்டியிடக் கூடிய தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை. தேர்தல் களத்தில் பெயரளவுக்குத்தான் போட்டி இருக்கிறது.
தகுதியான போட்டியாளர்கள் திமுகவுக்கு இந்தத் தேர்தலில் இல்லை என்பதுதான் நாட்டு மக்களின் கருத்தாக இருக்கிறது. சசிகலா, ராமதாஸ் இணைந்து கூட்டணி அமைத்திருப்பது பற்றி கேட்கிறீர்கள். மக்கள்தான் அவர்களது எதிர்காலம் குறித்து தீர்மானிக்கவேண்டும். டிடிவி தனி வழியில் சென்று கொண்டிருக்கிறார். அவர் செல்லும் வழி நல்ல வழியா என்பது தேர்தலுக்குப் பிறகு தெரியும். திமுகதான் தங்கள் எதிரி என்று விஜய் சொல்கிறார். எந்த வகையில் எதிரி என்று அவர் சொல்லவேண்டும். இன்றைக்கு மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய இயக்கமாக இருப்பது திமுகதான்’’ என்றார்.
* யார் பண்ணையார்? மக்களுக்கு தெரியும்
இளையான்குடியில் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நாங்கள் டெல்லி சென்றாலே தமிழக முதல்வர் பயப்படுகிறார் என டிடிவி.தினகரன் கூறுவது முற்றிலும் தவறு. முதல்வருக்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது. டெல்லி என்ன… அமெரிக்காவே மிரட்டினாலும் அவர் பணிய மாட்டார். தமிழ்நாடு என்றைக்கும் தலை குனியாது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அரசு அதிகாரிகள் திமுக கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர் என்ற தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு தவறானது.
தமிழக அரசு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறது என்பதை மக்கள் நன்றாக அறிந்துள்ளனர். ஆதவ் அர்ஜூனா பண்ணையார் ஆட்சி என கூறியுள்ளதாக சொல்கிறீர்கள். அவர் என்ன தொழில் செய்கிறார் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். யார் பண்ணையார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்’’ என்றார்.
* ‘இப்போதான் சுதந்திரமா இருக்கேன்’
ஓபிஎஸ் பேசுகையில், ‘‘உழைப்பிற்கு மதிப்பில்லை என்ற மிகப்பெரிய வருத்தத்துடன் இருந்தோம். சிரிப்பை மறந்து ஆறு ஆண்டுகள் ஆயிற்று. இப்போது தான் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். தாய் வீட்டில் இணைந்திருக்கிறோம். முதல்வர் எங்களை எல்லாம் தாயன்போடு இணைத்திருக்கிறார். அது தான் திராவிட பாரம்பரியம். அனைவரையும் ஒரு தாய் மக்களாக நம் முதல்வர் கருதுகிறார். அவருக்கு வெற்றிமேல் வெற்றி தான் கிடைக்கும்’’ என்றார்.
