கரூர் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சிறுவர்களை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி பரவி வருகின்றன. அதில், எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் பள்ளி சிறுவர்கள் அதிமுக கொடிகளை கையில் ஏந்தி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர் பிரசாரம் செல்லும் இடங்களில் சிறுவர்கள் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்தனர். அவர்களுக்கு விஜயபாஸ்கர் அதிகமான தொகையை அன்பளிப்பாக வழங்கினார்.
அந்த சிறுவர்களிடம் எனக்கு ஓட்டுபோடுவீர்களா? என்று கெஞ்சியபடி கேட்டார். சில இடங்களில் சிறுவர்கள் அவருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பிட்ட சில தெருக்களில் அவருடன் சிறுவர்களும் பிரசாரத்திற்கு சென்றனர். சிறுவர்களை அரசியல் பிரசாரங்களில் ஈடுபடுத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவை வெளியிட்டுள்ளது. இதனால் தேர்தல் விதியை மீறி பிரசாரம் செய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
