×

தொகுதி பங்கீடு எப்போது முடியும்? கனிமொழி பதில்

 

தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்பி நேற்று அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. ஒன்று, இரண்டு கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதுவும் விரைவில் முடிந்து விடும். நீண்ட நாட்களாகவே திமுக சொல்லிக் கொண்டிருக்கிறது, அதிமுக பாஜவின் பி டீம் ஆகிவிட்டது. பாஜ தலைமையில் தான் கூட்டணி இயங்கிக் கொண்டிருக்கிறது.

அதிமுக கூட்டணி என்ற பெயர் இருந்தாலும் அது பாஜவின் தலைமையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார். திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் கனிமொழி எம்பி போட்டியிடப் போவதாக பரவி வரும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் எதுவும் தெரிவிக்காமல் கையெடுத்து கும்பிட்டவாறு சிரித்துக் கொண்டு சென்றார்.

 

Tags : Kanimozhi ,Thoothukudi airport ,DMK alliance ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் உதயநிதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்