×

திருத்தணி அருகே ரூ.7.41 கோடியில் நந்தி ஆற்றில் உயர்மட்ட பாலம்: பயன்பாட்டிற்கு வந்ததால் மக்கள் மகிழ்ச்சி

திருத்தணி: திருத்தணி அருகே, பொதட்டூர்பேட்டைக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், மழை காலங்களில் தெக்களூர் நந்தி ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து தரைமட்ட பாலம் மூழ்கி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

இதனால், திருத்தணி-பொதட்டூர்பேட்டை இடையில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வாகன ஓட்டிகள் போக்குவரத்து வசதியின்றி சிரமம் அடைந்து வந்தனர். திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ பெரும் முயற்சியால் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில், மத்திய சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் நடைபாதை உள்பட 12 மீட்டர் அகலம், 104 மீட்டர் நீளத்தில் நந்தி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றது. இதையடுத்து, நேற்று நந்தி ஆற்றில் உயர்மட்ட பாலம் வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Nandi River ,Tirutani ,THIRUTHANI ,POTHATURPET ,Thiruthani-Pothaturbate ,
× RELATED காட்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் 1.69 லட்சம் பணம் பறிமுதல்