காட்பாடி: காட்பாடி அடுத்த பொன்னை 4 வழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் காரை சோதனை செய்தபோது, அவரிடமிருந்த ரூ. 1,69,700 ரொக்கப் பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படையினர் பணத்தைப் பறிமுதல் செய்து காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
