தஞ்சையில் இலவச கண்பரிசோதனை முகாம் 18ம் தேதி நடக்கிறது

தஞ்சை,பிப்.16: தஞ்சாவூர் பாம்பே ஸ்வீட்ஸ் நிறுவனர் குருதயாள் சர்மா, லெஷ்மி அம்மா நினைவாக மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன் பாம்பே ஸ்வீட்ஸ் குருதயாள் சர்மா, லெஷ்மி அம்மா அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 21ம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் வரும் 18ம் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நாகை ரோட்டில் உள்ள குருதயாள் சர்மா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கண்புரை உள்ள நோயாளிகள் முகாம் தினத்தன்றே மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்விழி லென்ஸ், அறுவை சிகிச்சை மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசமாக செய்யப்படும். பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடி தேவைப்பட்டால் முகாமிலேயே நல்ல தரமான முறையில் ரூ.150 முதல் ரூ.200 வரை கண்ணாடி கொடுக்கப்பட்டு, கண் கருவிழியில் புண் ஏற்பட்டால் இம்முகாமில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இம்முகாமிற்கு வரும்போது உங்கள் முகவரி, செல்நம்பர் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வந்து சீட்டு பதியும் இடத்தில் கொடுக்கவும். அறுவை சிகிச்சைக்கு அழைத்து வரப்படும் நோயாளிகளுடன் உறவினர்கள் தங்க அனுமதியில்லை. முகாம் நடைபெறும் இடத்திற்கு இலவச வேன் வசதி பாம்பே ஸ்வீட்ஸ் பழைய பேருந்துநிலையம் ரயிலடி எதிரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள பாம்பே ஸ்வீட்ஸ் உரிமையாளர் சுப்ரமணி சர்மா கேட்டுக்கொண்டுள்ளார். முகாமிற்கு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் கண்டிப்பாக முகாமில் கலந்துகொள்ள வேண்டாம்.

Related Stories: