பெங்களூரு: தமிழகம் தொழில் துறையில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என பாஜ உறுப்பினர் முனிரத்னா நாயுடு கூறினார். கர்நாடக சட்டப்பேரவையில் பெங்களூரு வளர்ச்சி குறித்து முன்னாள் அமைச்சரும் பாஜ உறுப்பினருமான முனிரத்னா நாயுடு பேசியதாவது, ‘பெங்களூருவில் குடிநீர் திட்டம் அமல்படுத்தப்படுகிறோம் என்ற பெயரில் உலக வங்கியிடம் இருந்து காங்கிரஸ் அரசு கடன் வாங்கியுள்ளது. அதே நேரம் இதில் விதி மீறல்கள் நடந்துள்ளன. மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சாதகமாக தீரப்பு வந்திருந்தாலும் மாநில காங்கிரஸ் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி ‘பெங்களூருவின் வளர்ச்சி முடிந்துவிட்டது. தெலங்கானாவுக்கு வாருங்கள் என வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். தமிழக அரசின் தொலைநோக்கு பார்வை நடவடிக்கையால் தொழில் துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது’ என்றார்.
