விகேபுரம்,மார்ச் 18: விகேபுரம் அருகேயுள்ள கோட்டை விளைப்பட்டியை சேர்ந்தவர் வனராஜ் (60). இரும்பு கடை நடத்தி வரும் இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி (26) என்பவர் பணியாற்றி வந்தார். பின்னர் இவரை வனராஜ் பணியில் இருந்து நீக்கியுள்ளார். இருப்பினும் மாயாண்டிக்கு சேர வேண்டிய ஊதியத்தை வனராஜ் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவத்தன்று மாயாண்டி, ஊதியம் தருமாறு வனராஜிடம் கேட்டுள்ளார். ஆனால், வனராஜ் பணம் தர மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த மாயாண்டி, வனராஜை இரும்பு கம்பியால் தலையில் சரமாரியாகத் தாக்கினார். இதில் படுகாயமடைந்த வனராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த விகேபுரம் போலீசார், மாயாண்டியை கைது செய்தனர்.
