- சாத்தான்குளம் கல்லூரி
- ஜப்பான்
- சாத்தான்குளம்
- சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்
- தமிழ்நாடு அரசு
சாத்தான்குளம், மார்ச் 18: சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை மாணவி அகஸ்டா, தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் நடத்திய பயிற்சியில் பங்கு பெற்று, சிறந்த இளங்கலை திறமைக்கான அறிஞர்கள் (SCOUT -TN) திட்டம் மூலம் ஜப்பான் நாட்டிற்கு மார்ச் 15ம் தேதி முதல் 27 வரை) இருவார பயிற்சிக்குச் தேர்வாகி சென்றுள்ளார். அவரை பயிற்சிக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி சார்பில் முதல்வர் (பொ) ஜோசப் சுரேஷ், கல்லூரியின் மூத்த பேராசிரியர் ஜமுனா ராணி முன்னிலையில் வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறை தலைவர், பேராசிரியர்கள், அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைத்தனர்.
