×

கோடிமுனையில் ஐஆர்இஎல் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்

குளச்சல், மார்ச் 18: மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் சைமன்காலனி ஊராட்சிக்கு உட்பட்ட கோடிமுனையில் முழுமையான கண் மருத்துவ முகாமை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது. ஐ.ஆர்.இ.எல் துணை பொதுமேலாளர் (சுரங்கம் மற்றும் பாதுகாப்பு) ஜெயசந்த் தலைமை வகித்தார். கோடிமுனை புனித மிக்கேல் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மேரி நிமில்டா முன்னிலை வகித்தார். பங்குத்தந்தை யூஜின் கோமஸ் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கண்புரை நோய், சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், குழந்தை கண்நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 601 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 328 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கு பேரவை பொருளாளர் அஸ்வின் ஜோஸ், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழு, செவிலியர்கள், ஐ.ஆர்.இ.எல் நிறுவன பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : IREL ,Kodimunai ,Kulachal ,Manavalakurichi ,Simon ,Colony Panchayat ,Aravind Eye Hospital ,Deputy General ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்