×

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை!!

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது. மலையில் பூஜை செய்ய சிலரை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட சில உத்தரவுகளை தனி நீதிபதி பிறப்பித்திருந்தார். இதற்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதிராமன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 8ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஒத்திவைத்தது.

Tags : G.R. Swaminathan ,Thiruparankundram Deepam ,Madurai ,Thiruparankundram ,Deepam ,
× RELATED கோவையில் வணிக கியாஸ் சிலிண்டர்களை...