×

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சுந்தர், வருண் வாழ்த்து

 

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி வாழ்த்து பெற்றனர். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடந்தது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய அணியில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டின் சுழல் இரட்டையர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருடன் மறக்க இயலாத தருணங்கள். விடாமுயற்சி, ஒழுக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றால் செதுக்கப்பட்ட அவர்களது பயணம் குறித்து அவர்களுடன் உரையாடினேன். மேலும் பல போட்டிகளில் வெற்றிக்கு இட்டுச் செல்லும் வகையில் பந்து வீசவும், பல பெருமைகளை அடையவும் இருவரையும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Sundar ,Varun ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,Washington ,Varun Chakravarthy ,T20 World Cup ,India ,Sri Lanka ,
× RELATED மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்;...