×

தங்கம் விலையில் மாற்றம் பவுனுக்கு ரூ.400 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த 12ம் தேதி முதல் தங்கம் விலை குறைந்து வருவதை பார்க்க முடிகிறது. அதாவது, 12ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு பவுன் 1 லட்சத்து 19,760க்கும், 13ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 19,200க்கும் விற்பனையானது. தொடர்ந்து கடந்த 14ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.14,760க்கும், பவுனுக்கு ரூ.1,120க்கு குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 18,080க்கும் விற்பனையானது.

தங்கத்தை போல வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.80 லட்சம் ஆகவும் விற்பனையானது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வார தொடக்க நாளான நேற்றும் தங்கம் விலை குறைந்தது. அதாவது, நேற்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,710க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1,17,680க்கும் விற்பனையானது. தங்கத்தை போன்று வெள்ளியும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.276க்கும், கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

Tags : Chennai ,
× RELATED சென்செக்ஸ் 939 புள்ளிகள் உயர்வு