×

சென்செக்ஸ் 939 புள்ளிகள் உயர்வு

 

மும்பை: தொடர்ந்து 3 நாள்களாக சரிந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் வர்த்தகத்தின் முதல் நாளில் 1%க்கும் மேல் உயர்ந்தது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தைகள் பிற்பகலில் உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 939 புள்ளிகள் உயர்ந்து 75,503 புள்ளிகளானது. அல்ட்ரா டெக் 4%, எட்டர்னல் 3%, ஹெச்.டி.எஃப்.சி., டிரென்ட் தலா 2.6%, பஜாஜ் பைனான்ஸ் பங்கு 2% உயர்ந்தது. ஐடிசி, பஜாஜ் பின்செர்வ், எம்&எம், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, இண்டிகோ உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்தன. பி.இ.எல், சன் பார்மா, பவர் கிரிட், என்.டி.பி.சி., டைட்டன், பார்த்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 268 புள்ளிகள் உயர்ந்து 23,409 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Tags : Sensex ,Mumbai ,Mumbai Stock Exchange ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,680க்கு விற்பனை..!!