×

பொன்னமராவதி அருகே புலவனார்குடியில் புதிய பயணியர் நிழற்குடை

பொன்னமராவதி,மார்ச்16: பொன்னமராவதி அருகே உள்ள புலவனார்குடியில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையயை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூர் ஊராட்சி புலவனார்குடியில் நமக்குநாமே திட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடைதிறப்பு விழா நடந்தது. தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தலைமை வகித்து புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார்.

பொன்னமராவதி தாசில்தார் பழனிச்சாமி, ஒன்றிய ஆணையர்கள் கண்ணன், அரசமணி, திமுக ஒன்றியச்செயலாளர் முத்து, திமுக ஒன்றிய துணைச்செயலாளர்கள் சுரேஷ்பாண்டியன், முருகேசன், அவைத்தலைவரகள் முகமது ரபீக், தட்சிணாமூர்த்தி, முன்னாள் வலைதள பொறுப்பாளர் ஆலவயல் முரளி சுப்பையா, தேனூர்சின்னையா, முன்னாள் ஒன்றியக்கவுன்சிலர்கள் நாராயணன், தகவல் தொழில்நுட்ப அணி விஸ்வநாதன், சுதர்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Bulavanargudi ,Ponnamaravathi ,Minister ,Raghupathi ,Name ,Bulavanargudi, Idayathur panchayat ,Tamil Nadu Natural Resources… ,
× RELATED வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்