×

இந்தியாவில் உலர்பழங்கள் விலை 40% உயர்வு

புதுடெல்லி: மேற்கு ஆசிய போர் காரணமாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் உலர்பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாகவும், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் சிக்கல்களாலும் உலர்பழங்களின் வரத்து 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்தியச் சந்தைகளில் உலர்பழங்களின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக, உயர்தர மம்ரா பாதாம் ஒரு கிலோ 1,700 ரூபாயிலிருந்து 2,800 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஈரான் பிஸ்தா 1,300 ரூபாயிலிருந்து 2,500 ரூபாய் வரையிலும், அப்ரிகாட் 700 ரூபாயிலிருந்து 1,400 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அத்திப்பழம் 1,200 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும், ஈரான் பேரீச்சம்பழம் 300 ரூபாயிலிருந்து 370 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.

Tags : India ,New Delhi ,West Asian war ,Iran ,Israel ,United ,States ,Afghanistan-Pakistan border ,
× RELATED கொல்கத்தாவில் பிரதமர் மோடி பேச்சு...