- குத்துக்கல்வலசை பஞ்சாயத்து
- தென்காசி
- தென்காசி பஞ்சாயத்து யூனியன்
- காமராஜ் நகர்
- அண்ணாநகர்
- பஞ்சாயத்து
- ஜனாதிபதி
- சத்யராஜ்
- காமராஜ்
- நகர்…
தென்காசி, மார்ச் 13: தென்காசி ஊராட்சி ஒன்றியம், குத்துக்கல்வலசை ஊராட்சியில் காமராஜர் நகர் மற்றும் அண்ணா நகர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தீவிர முயற்சியால் ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.27 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் காமராஜர்நகர் 4-வது தெரு, 5-வது தெரு, 6-வது தெரு, 7-வது தெரு, 8-வது தெரு மற்றும் 9-வது தெரு ஆகிய 6 தெருக்களில் தார் சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் முருகேசன், தென்காசி ஊராட்சி ஒன்றிய பணிமேற்பார்வையாளர் செல்வம், தென்காசி ஊராட்சி ஒன்றிய ஆர்.ஐ.கௌதமி மற்றும் துணைத்தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர். இதேபோல் குத்துக்கல்வலசை அண்ணாநகர் பகுதிகளான அண்ணாநகர் 9-வது தெருவில் 2-வது குறுக்கு தெரு, 3-வது குறுக்கு தெரு, 4-வது குறுக்கு தெரு, அண்ணாநகர் 10-வது தெருவில் 3-வது குறுக்கு தெரு, 4-வது குறுக்கு தெரு, 5-வது குறுக்கு தெரு, 6-வது குறுக்கு தெரு அண்ணாநகர் சீயோன் நகர் மெயின் தெரு, சீயோன் நகர் 1-வது குறுக்கு, 2-வது குறுக்கு தெரு மற்றும் 3-வது குறுக்கு தெரு ஆகிய 11 தெருக்களில் தார் சாலைகள் அமைத்தல் பணி ரூ.53 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவருகிறது.
