×

சமத்துவ மக்கள் கழக பொறுப்பாளர் நியமனம்

தூத்துக்குடி, மார்ச் 13:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சமத்துவ மக்கள் கழக தேர்தல் பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் நியமித்துள்ளார். சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். அதன்படி, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக காமராசு, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக மாலைசூடி அற்புதராஜ், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக கண்டிவேல், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக சகாயராஜ், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக அருண் சுரேஷ்குமார், வைகுண்டம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக சதீஷ்மூர்த்தி, ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக அருள்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Tags : Equality People's Party ,Thoothukudi ,Ernavoor Narayanan ,
× RELATED உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டு வந்த ரூ.80 லட்சம் பறிமுதல்