- பலேனகு
- சின்னத்துறை மீனவர் கூட்டுறவு சங்கம்
- Nithiravilai
- ராஜேஷ் குமார்
- சட்டமன்ற உறுப்பினர்
- தூத்தூர்
- சின்னத்துரா மீனவர்களின்…
நித்திரவிளை,மார்ச் 13: தூத்தூர், சின்னத்துறை மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு பல்நோக்கு கட்டிடம் அமைக்க ராஜேஷ்குமார் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கினார். தற்போது கட்டிட பணிகள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து சின்னத்துறை மீனவர் கூட்டுறவு சங்க பல்நோக்கு கட்டிடத்தை ராஜேஷ் குமார் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில் தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெஸ்டின், குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் அந்தோணிபிச்சை, தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சூசைபிரடி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண், குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜிம்சன் மெராண்டா, நிர்வாகிகள் புரூசிலி, சஜின், செபஸ்தியான், ஜோணி, ஆன்றனி, மெர்லின், பிரிட்டோ, கொச்சுராணி, சின்னத்துறை ஆலய பங்கு தந்தை உள்பட பலர் பங்கேற்றனர்.
