×

ஓசூர் அருகே மலைகிராமங்களில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பு

*பொதுமக்கள் மகிழ்ச்சி

ஓசூர் : வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிகரமாரணபள்ளி, சிங்கிரிப்பள்ளி, எப்ரி, கொங்கணப்பள்ளி, கட்டாயம்மேடு ஆகிய மலை கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது கிராமங்களுக்கு உயர்கோபுர மின்விளக்குகளை அமைத்து கொடுக்க வேண்டும் என வேப்பனஹள்ளி எம்எல்ஏ கேபி.முனுசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட இந்த கிராமங்களில் நீண்ட காலமாக மின் விளக்குகள் இல்லாததால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாடுவது பெரும் சவாலாக இருந்து வந்தது. இந்நிலையில், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கே.பி.முனுசாமி எம்எல்ஏ, உயர்கோபுர மின் விளக்குகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரையின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் உயர்கோபுர மின் விளக்குகளை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதனடிப்படையில் சிகரமாரணபள்ளி, சிங்கிரிப்பள்ளி, எப்ரி, கொங்கணப்பள்ளி, கட்டாயம்மேடு ஆகிய மலை கிராமங்களில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வழக்கறிஞரணி மாநில துணை செயலாளர் தமிழ்ச்செல்வன், வேப்பனஹள்ளி ஒன்றிய செயலாளர்ள் ராமமூர்த்தி, சைலேஷ் கிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெய்பிரகாஷ் மற்றும் வேப்பனஹள்ளி ஒன்றிய நிர்வாகிகள், ஊர் கவுண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Hosur ,Sikaramaranapalli ,Singiripalli ,Ebri ,Konganapalli ,Kadayammedu ,Veppanahalli ,MLA ,K.P. Munusamy ,
× RELATED சென்னை வால்டாக்ஸ் சாலையில் ரூ.18.42...