- ஐரல் பத்திரப் பதிவு அலுவலகம்
- அமைச்சர்
- அனிதா ராதாகிருஷ்ணன்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- பத்திரப் பதிவு அலுவலகம்
- ஏரல்
- ஐரால் தாலுகா அலுவலகம்
*அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றினார்
ஏரல் : ஏரலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். ஏரலில் நடந்த விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றினார்.
ஏரல் தாலுகா அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தை சென்னையில் நடந்த விழாவில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து ஏரல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து இனிப்பு வழங்கினார். விழாவில் திருநெல்வேலி துணைப் பதிவுத்துறை தலைவர் சுவாமிநாதன், தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அசோகன், தணிக்கை மாவட்ட பதிவாளர் ஜெயப்பிரகாஷ், திருச்செந்தூர் ஆர்டிஓ கவுதமன்,
ஏரல் தாசில்தார் செல்வகுமார், திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், மாவட்ட வக்கீல் அணி தலைவர் செல்வகுமார், துணை அமைப்பாளர் கிருபாகரன், ஆழ்வை யூனியன் முன்னாள் சேர்மன் ஜனகர், ஸ்ரீவை. கிழக்கு ஒன்றிய செயலாளர் கோட்டாளம், ஏரல் பேரூர் செயலாளர் ராயப்பன்,
பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஜான்பாண்டியன், மாவட்ட பிரதிநிதி தியாகராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜவேல், மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் கொற்கைமாறன், ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் மணிவண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் முத்துமாரி, அன்பு நவீன், ஒன்றிய அவைத்தலைவர் மாரியப்பன், துணை செயலாளர்கள் ராமசுப்பிரமணியன்,
சண்முகராஜா, நகர பொருளாளர் ஆத்தங்கரையான், வார்டு செயலாளர் செந்தில் ஆறுமுகம், கந்தராஜ், லிங்கம், கிளை செயலாளர்கள் காஜாமுகைதீன், ஜான்சன், வட்டார காங். தலைவர்கள் தாசன், ஜெயராஜ், ஸ்ரீவை. யூனியன் முன்னாள் கவுன்சிலர் பாரத், ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் எட்வர்ட், நிர்வாகி தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
