- தேனி எஸ்.பி.
- பிறகு நான்
- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்
- மத்திய பாதுகாப்புப் படைகள்
- தேனி மாவட்டம்
தேனி, மார்ச் 11: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி தேனி மாவட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட போலீஸ் எஸ் பி அலுவலகத்தில் மத்திய பாதுகாப்பு படையினருடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் எஸ் பி சினேகா பிரியா தலைமையில் நடந்தது. இதில் தேர்தல் காலத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், தேர்தல் பணிகள் முழுமையாக சீராக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்கவும் காவல்துறையினரும் மத்திய பாதுகாப்பு படையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என போலீஸ் எஸ்.பி சினேகா பிரியா அறிவுறுத்தினார்.
