×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,392 மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர்

புதுக்கோட்டை, மார்ச் 12: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய 10ம் வகுப்பு தேர்வில் 22,392 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 595 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கி, ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூலம் மொத்தம் 22,806 பேர் எழுதிட விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 11,411 பேர் மாணவர்கள், 11,395 பேர் மாணவிகள். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 136 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தனித்தேர்வர்களாக விண்ணப்பித்திருந்த 180 பேருக்காக 3 தனித்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான நேற்று நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வினை எழுத, 22,219 பேர் வந்திருந்தனர். இவர்களில் 11,029 பேர் மாணவர்கள், 11,188 பேர் மாணவிகள். 588 பேர் வரவில்லை. இவர்களில் 381 பேர் மாணவர்கள், 207 பேர் மாணவிகள். மேலும், தனித்தேர்வர்களில் 173 பேர் தேர்வெழுதினர், 7 பேர் தேர்வெழுத வரவில்லை. மாவட்டம் முழுவதும் தனித் தேர்வர்களும் சேர்த்து மொத்தம் 22,392 பேர் தேர்வெழுதினர். 595 மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆனார்கள்.

Tags : Pudukkottai district ,Pudukkottai ,Tamil Nadu ,
× RELATED போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ரூ.30...