×

கோவை வ.உ.சி பூங்காவில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கோவை வ.உ.சி பூங்காவில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கோவை அவினாசி பிரதான சாலையில் உள்ள வ.உ.சி. பூங்காவில் 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு திருவுருவச் சிலையை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச்செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், கோவையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி , துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையர் கண்ணன், ஜி.டி. நாயுடு மகன் ஜி.டி. கோபால், அவரது மனைவி சந்திரா, குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : G.D. Naidu ,Coimbatore VOC Park ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,VOC Park ,Avinashi Main Road ,Coimbatore ,
× RELATED உரிய நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க...