சென்னை : வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பி.ஜி. விடுதிகளில் தேநீர். காபி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஐ.டி. விடுதிகள் மற்றும் பி.ஜி. விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிக எரிபொருள் பயன்பாடு தேவை என்பதால் சப்பாத்தி, தோசை தற்காலிகமாக வழங்கப்பட மாட்டாது என்றும் சாம்பார், குருமா தற்காலிகமாக நிறுத்தப்படுவதுடன் அதற்கு பதிலாக சட்னி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
