சென்னை: கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கத்தில் வீடு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பார்த்திபன் (33), மனைவி ஜெயசித்ரா (29), 2 வயது குழந்தை ஜெயஸ்ரீ ஆகியோர் உயிரிழந்தார். 3 பேரின் உடல்களை கைப்பற்றி கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

