×

பாளையில் பதிவுத்துறை சார்பில் இணையதள சேவைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்

நெல்லை : பாளையில் ஆன்லைனில் பதிவுத்துறை சேவைகள் பெறும் புதிய வசதி குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழகத்தில் பதிவு துறை அறிவிப்பின்படி பொதுமக்கள் பதிவு துறையின் சேவைகளை எளிமையாகவும், வெளிப்படையாகவும் தெரிந்து கொள்ளும் வகையில் மாநில அளவில் விழிப்புணர்வு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டது. பொதுமக்கள் இடைத்தரகர்கள் இன்றி பதிவுத்துறை சேவைகளை தாங்களாகவே இணையதளம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நேற்று நடந்தது.

பாளையில் நடந்த முகாமிற்கு நெல்லை மண்டல துணை பதிவு துறை தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்து முகாம் குறித்து பேசினார். நெல்லை தணிக்கை மாவட்ட பதிவாளர் ரமேஷ், பாளை நிர்வாக மாவட்ட பதிவாளர் ராஜா, பாளை தணிக்கை மாவட்ட பதிவாளர் செல்வக்குமாரி ஆகியோர் பேசினர். பதிவு துறையின் ஸ்டார் 3.0 திட்டம் காதிதமில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உரவாக்கம், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறை குறித்து விளக்கப்பட்டது.

இணையவழி ஆவண பதிவு, சான்றிட்ட நகல் பெறுதல், வில்லங்க சான்று பெறுதல், வழிகாட்டி மதிப்பு அறிதல், திருமண பதிவு மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை பதிவு துறையின் இணைய தளம் www.tnreginet.gov.in மற்றும் செல்போன் செயலி TNREGINET மூலம் மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பங்கேற்றவர்களுக்கு மென்பொருள் விளக்க கையேடும் வழங்கப்பட்டது. பொதுமக்களின் சந்தேகங்களுக்கு துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

Tags : Registration Department ,Palai ,Nellai ,Tamil Nadu ,
× RELATED மெரினாவில் ‘கற்றனைத் தூறும் அறிவு’...