×

பாளை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

தியாகராஜ நகர் : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் சூல் மற்றும் மகளிர் மருத்துவத் துறை சார்பில் “பெண்கள் ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வில் ஒருங்கிணைந்த அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் கருப்பொருள் “ஆரோக்கியமான பெண்கள் வலுவான சமூகம்” என்பதாகும். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் மல்லிகா தலைமை வகித்தார். துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் எசுல்பின் நிஹார், உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் கணேஷ்பாபு முன்னிலை வகித்தனர்.

பெண்களின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் மகராசி மணிசெல்வி வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கில் பேராசிரியர் டாக்டர் மல்லிகா “பெண்கள் ஆரோக்கியத்தில் வர்மத்தின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மகப்பேறு மற்றும் மகளிர் நோய் நிபுணரும் கருத்தரிப்பு சிறப்பு மருத்துவருமான டாக்டர் காயத்ரி, “பெண்கள் ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு” என்ற தலைப்பில் பேசினார்.

அசோகம் சித்தா கேர் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் வனிதா, “குடலிலிருந்து கருப்பை வரை” என்ற தலைப்பில் பெண்களின் குடல் ஆரோக்கியத்திற்கும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பை விளக்கினார்.

தொடர்ந்து நடன நிகழ்ச்சி, வாய்மொழி விளக்கவுரை, வினாடி வினா போட்டி மற்றும் மின்னணு போஸ்டர் விளக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. டாக்டர் சுஜாதா நன்றி கூறினார்.

Tags : Palai Government Siddha Medical College ,Thyagarajanagar ,International Women's Day ,Department of Obstetrics and Gynecology ,Palaiyankottai Government Siddha Medical College ,
× RELATED மெரினாவில் ‘கற்றனைத் தூறும் அறிவு’...