×

‘ஜனநாயகன்’ புதிய சிக்கல் ரிவைசிங் கமிட்டி உறுப்பினருக்கு உடல்நலக்குறைவால் திரையிடல் ரத்து

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமான ‘ஜனநாயகன்’ கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. சென்சார் பிரச்னை காரணமாக குறித்த நேரத்தில் வெளியாகவில்லை. ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்னையில் நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு படத்தை மறு தணிக்கை செய்ய தணிக்கை வாரியத்தை அணுகியது படக்குழு. ரிவைசிங் கமிட்டி பார்த்து படத்துக்கு சென்சார் சான்றிதழ் தந்தால் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு முனைப்பு காட்டி வருகிறது. இந்த சூழலில் ‘ஜனநாயகன்’ படத்தை சென்சார் போர்டின் ரிவைசிங் குழு நேற்று மதியம் 2 மணிக்கு பார்க்க இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்னிற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஜனநாயகன் படத்திற்கு அடுத்த வாரம் சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இவை நடந்து முடிந்தால் ஜனநாயகன் படத்துடைய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தை பார்க்க இருந்த ரிவைசிங் கமிட்டி உறுப்பினருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் நேற்று நடைபெற இருந்த திரையிடல் ரத்து செய்யப்பட்டது. மேலும் அடுத்து ரிவைசிங் கமிட்டி எப்போது படம் பார்க்கும் என்பது குறித்த தகவல் இல்லை. இப்படி சென்சார் சான்றிதழ் இல்லாமல் பட ரிலீஸ் தேதி தள்ளிப்போவதால் படக்குழுவினர் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Chennai ,Vijay ,last ,Pongal festival ,
× RELATED நடிகர் விஜயை பின் தொடர்ந்ததால்...