×

அர்த்தசாமபூஜை

*தாரகாரி: சூரபத்மனின் தம்பியருள் ஒருவன் தாரகாசூரனை அழிக்க முருகன் முயன்றபோது, அவன் அங்கத்தினுள் ஆத்மலிங்கம் உள்ளதால் அழிக்க முடியவில்லை. சிவனின் ஞானவேல் அனுப்பி ஆத்மலிங்கத்தை அவனுடமிருந்து விலக்கி அழித்ததால் தாரகாரி எனப்பட்டார்.

*ஸ்ரீருத்திரமும் சமகமும்: திரிபுரசம்ஹாரத்தின் போது சிவனை தேவர்கள் நீரே பசுபதி என்று போற்றி பாடியதே ஸ்ரீருத்திரம். இதில் அவரின் வில்லுக்கும் அம்புக்கும் முதலில் வணக்கம் சொல்லப்படுகிறது. இந்த தோத்திரத்தில் மகிழ்ந்த சிவனிடம் தேவர்கள் தமக்கு வேண்டியதை அருள வேண்டுமென்று வேண்டுவதாக அமைவதே யஜுர்வேதத்தில் அமைந்த சமகம் ஆகும்.

*பெண்ணாகடம்: அப்பர், ஈசனிடம் கேட்டபடி, ஒரு சிவபூதம் மற்றவர் கண்களுக்கு தோன்றாது இருந்து, அப்பரின் தோலில் சூலம் இடபம் ஆகியவற்றை முத்திரையாக சாத்தியது.

*அர்த்தசாமபூஜை: சிவன் ஆதிசைவராய் பூஜை செய்த திருவையாறு தலத்தில் மட்டுமே சிவகலை அர்த்தசாம பூஜைக்கு பிறகும் அகலாமல் அவ்விடமே இருக்கும். ஏனைய திருக்கோயில் சிவகலைகள் அர்த்தசாம பூஜைக்கு தில்லைச்சிற்றம்பலத்தில் ஒடுங்கும்.

*ஆகமம்: சிவன் தன் மனத்தால் எண்ணித் திருவாயால் அருளியது ஆகமம் ஆகும். ஆகமம் என்பதற்கு ஆன்மாவைத் தனது வசத்தில் நிலைப்படுத்தி இகவாழ்வில் மேன்மையும் பரத்தில் வீடுபேறு நிலைபெறு செய்தல் என்றும் வாழ்வை நெறிபடுத்துதல் என்பதும் பொருளாகும். காஞ்சியில் அம்பிகை சிவாகமத்தின்படியே சிவபெருமானை மாவடியில் பூசித்தார் சேக்கிழார்.

*நான்மாடகூடல்: வருணன் ஏவிய மேகங்களை தடுக்க சிவன் விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாக கூடி நின்று காத்தலால் மதுரைக்கு நான்மாடகூடல் என்று பெயர்.

*திருவிழிமிழலையில்: கார்த்தியாயன முனிவர்க்கும் அவர் மனைவிக்கும் பார்வதி அன்னபூரணியாக காட்சி. இங்கு மூலத்தானத்தில் சிவலிங்கத்திற்கு அருகில் அன்னபூரணி வடிவம் உள்ளது. திருச்சோற்று அம்பிகைக்கு பெயர் அன்னபூரணி.

*திரிபுராந்தகி: சிவபெருமான் செய்த வீரச்செயல்கள் எட்டில் திரிபுரதகனத்தில் மட்டுமே அவர் உமையோடு இருந்து வீரம் விளைந்தார். இதனால் அம்பிகைக்கு திரிபுராந்தகி என்ற பெயரும், சாயலாக திரிபுரசுந்தரி, திருபுரவல்லி, திரிபுரநாயகி என்ற பெயர்களும் உண்டாயின.

*ஜலந்தரேசம்: சிவசக்கரத்தைத் தாங்கியதால் ஜலந்தரன் ஆன்மா ஒளிவடிவம் விண்ணில் இருந்து, பூர்வஜன்ம புண்ணியம் பிருந்தையின் சிவபக்தியால் சிவஞானம் பெற்று காஞ்சி வந்து ஒரு சிவலிங்கம் அமைத்து வழிபட்ட போது, அதை ஈசன் தன்னுள் ஒடுக்கி கொண்டார். ஜலந்தரன் ஆன்ம பூசித்த லிங்கம் உள்ள ஆலயம் ஜலந்தரேசம். ஓணகாந்தன் தனி ஆலய வளாகத்திலுள்ளது.

*வீரபத்திரர்: வீரம் – அழகு, பத்திரம் – காப்பவன் என்று பெயர். நம்மை காத்து அருள்வதால் வீரபத்திரன் எனப்பட்டான். வீரபத்திரருக்கு வீரேசுவரன் என்று பெயர். அதற்கு வீரத்தால் மேம்பட்டவன் என்றும், வீரத்தை ஐஸ்வரியமாக உடையவன் என்றும் கூறுவர். வாகனம் – காளை, குதிரை தேர் – வைதிகத்தேர், மாலை – தும்பைப் பூமாலை.

*நான்கும் ஒன்றில்: காஞ்சி மண்டலத்தில் திருஊரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் திருநீரகம், திருக்காரகம், திருகார்வானம் ஆகிய 3 திவ்யதேசத்துப் பெருமாள்கள் எழுந்தருளி உள்ளனர். 4 திவ்யதேச பெருமாளும் ஒரே திவ்யதேசத்தில் உள்ளது.

*திருமண சாட்சி மரம்: திருப்புறம்பயம் சம்பந்தர் இத்தலத்தில் சிவலிங்கம், வன்னிமரம், கிணறு (மடைப்பள்ளி) சாட்சி வைத்து செய்து வைத்த திருமணத்தை பின்னாளில் சோதனை வந்தபோது அதனை மதுரையில் ஈசான பாகத்தில் ஈசன் தோன்றும்படி செய்தார்.

*திருவகீந்திரபுரம்: திருமாலின் வடிவம் மும்மூர்த்திகளை குறிக்கும். இடுப்பின் கீழுள்ள பகுதி பிரமனாகவும், இடுப்பிலிருந்து கழுத்துவரை திருமாலாகவும், கழுத்துக்கு மேலேயுள்ள பகுதி சிவபெருமானாக உள்ளதால், பெருமானுக்கு தேவநாதன் என்று பெயர்.

அனந்தபத்மநாபன்

Tags : Arthasama Puja ,Tarakarī ,Lord ,Murugan ,Tarakasuran ,Surapatman ,Shiva ,Gnanavel ,Atma Linga ,Srirudra ,Samagam ,Tripura ,
× RELATED நாம் கொடுப்பவரா? பெற்றுக் கொள்பவரா?