×

தா.பழூர் பகுதியில் நீர்வளத்துறை சார்பில் ரூ.69.50 லட்சம் செலவில் பல்வேறு நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள்

தா.பழூர், மார்ச் 9: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறை சார்பில், வேம்புகுடி செங்கால் ஓடை வாய்க்காலை, ரூ.12.00 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல், சோழன்மாதேவி பொன்னாறு 4-வது புதிய பிரதான வாய்க்காலை ரூ.15.00 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல், சோழன்மாதேவி பொன்னாறு 4-வது கிளை வாய்க்காலை ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல், காரைக்குறிச்சி கோவத்தட்டை ஏரி வாய்க்காலை,ரூ.4.00 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல், வாழைக்குறிச்சி பொன்னாறு பிரதான வாய்க்காலை ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், உதவி பொறியாளர் நாவலடியன், திமுக ஒன்றிய அவைத்தலைவர் சூசைராஜ், மாவட்ட அணி நிர்வாகிகள் கார்த்திகை குமரன், சம்மந்தம், முருகானந்தம், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மகாலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

Tags : Tha.Pazhur ,Water Resources Department ,Jayankondam ,Ariyalur district ,Vembugudi Chengal Odai canal ,Cholanmadevi Ponnar 4th ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்