×

தொழில் முனைவோர் மேம்பாட்டு, புத்தாக்க நிறுவனம் நடத்தும் மூன்று நாள் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

ஜெயங்கொண்டம் மார்ச் 9: தமிழ்நாடு மாநில திட்ட குழு, அரியலூர் மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து நடத்தும் மூன்று நாள் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி, ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் வளமிகு வட்டாரங்கள் என்பதன் அடிப்படையில் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் வட்டாரத்தை உட்பட்ட கிராமங்களில் இருந்து 30 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த பயிற்சியினை வேளாண் உதவி இயக்குனர் (பொ) மகேந்திர வர்மன் பயிற்றுவித்தார். இந்த பயிற்சியின் இறுதி நாளான நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர், கஸ்தூரி பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் பை, பயணப்படி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். பயிற்சியினை மாவட்ட திட்ட மேலாளர் பிரவீன் ஏற்பாடு செய்து நடத்தினார்.

 

Tags : Entrepreneur Development ,Innovation Institute ,Jayangondam ,Tamil Nadu State Project Committee ,Ariyalur District Project Office ,Entrepreneurship Development ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்