சென்னை : ஓரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட தமிழ்நாடு எனும் என் இலட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கள்தான் என்று தமிழ்நாட்டு பெண்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், “தரமான கல்வியும், உயர் வேலைவாய்ப்புகளும் தன்னிறைவும், பொருளாதாரச் சுதந்திரமும், அனைத்துக்கும் மேலாக சிறந்த உடல்நலனும் கொண்டவர்களாகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகளிரையும் உயர்த்தும் சமூக விடுதலை இலக்கினை அடுத்த 5 ஆண்டுகளில் உறுதியாக அடைவோம்!” என்று குறிப்பிட்டார்.
