×

ராயக்கோட்டை பகுதியில் சாமந்தி பூ நாற்றுகள் உற்பத்தி பணி தீவிரம்

ராயக்கோட்டை : ராயக்கோட்டை பகுதி சாமந்திப்பூவுக்கு பிரதானமாக உள்ளது. அதனால், இங்கு விளைச்சலாகும் சாமந்திப்பூவை வாங்க வெளியூர் பூ வியாபாரிகள் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். ஆயுத பூஜையில் ஆரம்பித்து பொங்கல் பண்டிகை வரை விளைச்சலான பூ சீசன் முடிந்துள்ளதால், இப்போது மீண்டும் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதற்காக நாற்றுகள் அதிகம் தேவைபடுவதால், சாமந்தி செடிகளிலுள்ள துளிர்களை வெட்டி எடுத்து, அதை உரம் நிறப்பிய பிளாஸ்டிக் தட்டுகளில் நட்டு வளர்க்கின்றனர். அந்த நாற்று 15 நாட்களில் முளைத்து நாற்றாகிறது.

அதை வாங்கிச்செல்லும் விவசாயிகள், நட்டு சாமந்தி பூ தோட்டங்களாக உருவாக்குகின்றனர். நாற்றுகள் செடிகளாக வளர்ந்து, சாமந்தி பூக்களை விடுகிறது. நாற்றுகளுக்கான தேவை அதிகம் இருப்பதால், நாற்றுகளை உற்பத்தி செய்வதில், பண்ணையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : Rayakota ,RAYAKOTTA ,CHAMANDIPUU ,Bangalore ,Ayudha Pooja ,Pongal festival ,
× RELATED நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில்...