×

கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 71 போலீசாருக்கு சான்றிதழ்

*எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்

கடலூர் : கடலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்கு எஸ்பி அறிவுரை வழங்கினார்.

கலந்தாய்வு கூட்டத்தில் ஏடிஎஸ்பி கோடீஸ்வரன், டிஎஸ்பி ரகுபதி மற்றும் உட்கோட்ட டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வு கூட்டத்தில் கடலூர் மாவட்ட காவல்துறையில் கடந்த பிப்ரவரி மாதம் சிறப்பாக பணிபுரிந்த விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், தனி விரல்ரேகை பிரிவு உதவு ஆய்வாளர் தசரதராமன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் உள்பட 71 காவல்துறையினருக்கு கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.

Tags : Cuddalore ,SP Jayakumar ,Cuddalore District SP ,SP ,Jayakumar ,
× RELATED நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில்...