×

மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனங்களில் ‘ஈடி’ ரெய்டு

மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிதி முறைகேடுகள் தவிர, வங்கி மோசடி தொடர்பான பணமோசடி வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை இரண்டு முறை விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள 10 முதல் 12 இடங்களில் இந்த சோதனைகள் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். அமலாக்கத்துறையின் சுமார் 15 குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

Tags : 'ED' ,ANIL AMBANI ,HYDERABAD, MUMBAI ,Mumbai ,Enforcement Department ,
× RELATED இந்தியாவுடன் கடற்பயிற்சியில் ஈடுபட்ட...