×

அசாமில் கூட்டு பிரசாரம் 4 எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

அசாமில் ஆளும் பாஜவுக்கு எதிராக கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சுப்ரகாஷ் தாலுக்தார், அசாம் ஜாதிய பரிஷத் தலைவர் லுரின்ஜோதி கோகோய் மற்றும் அனைத்துக் கட்சி மலைத் தலைவர்கள் மாநாட்டுத் தலைவர் ஜோன்ஸ் இங்க்டி காதர் ஆகியோருடன் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இதில், இன்னமும் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. சில தொகுதிகளை பல கட்சிகள் கேட்பதால் இழுபறி நிலவி வருகிறது. இதனால், காங்கிரஸ் தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வௌியிட்டுவிட்டது. அதில் 42 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், பாஜவுக்கு எதிராக அசாமில் கூட்டாக பிரசாரம் செய்யப்போவதாக இந்த 4 எதிர்க்கட்சிகளும் அறிவித்துள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் மாநில கவுரவ் கோகோய் கூறுகையில், ‘‘எங்கள் கருத்துக்களை ஒன்றாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது என்று நாங்கள் உணர்ந்தோம். எனவே, இனிமேல் கூட்டுப் பிரசாரத்தைத் தொடங்குவோம். விரைவில் தொகுதி பங்கீடு உறுதியாகும். இந்த கூட்டணியின் கதவுகள் திறந்தே உள்ளது. மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது. பாஜவை அகற்றுவதே எங்கள் நோக்கம்’’ என்றார்.

Tags : Assam ,Congress ,BJP ,Subrakash Talukdar ,Assam Jatiya Parishad ,president ,Lurinjyoti Gogoi ,
× RELATED இந்தமாத இறுதிக்குள் இந்தியா நக்சல்...