- அசாம் காங்கிரஸ்
- பாஜக
- அசாம்
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- பூபன்போரா
- கமலாக்ய தே புரகாயஸ்தா
- சஷிகாந்த தாஸ்
- பசந்தா தாஸ்
அசாம் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பூபன்போரா திடீரென கட்சி மாறி பா.ஜவில் இணைந்தார். தற்போது மேலும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பா.ஜவில் இணைந்துள்ளனர். கமலாக்யா தே புரகாயஸ்தா, சஷிகாந்த தாஸ் மற்றும் பசந்தா தாஸ் ஆகியோர் நேற்று ஒன்றிய அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா முன்னிலையில் அசாம் மாநில பாஜ தலைவர் திலீப் சைகியா தலைமையில் பா.ஜவில் இணைந்தனர்.
இவர்களுடன் முன்னாள் காங்கிரஸ் இணைச் செயலாளர் பர்ஷா பாப் கலிதா மற்றும் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கங்கன் நாத் ஆகியோரும் பா.ஜவில் இணைந்துள்ளனர். இதுபற்றி அசாம் முதல்வர் ஹிமந்தாபிஸ்வா சர்மா கூறுகையில், ‘3 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கடந்த 2 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் பா.ஜவையும், எனது அரசையும் ஆதரித்து பேசி வருகிறார்கள்.
அவர்கள் தற்போது முறைப்படி பாஜவில் இணைந்துள்ளனர். அவர்களை வரவேற்கிறேன். அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படுமா என்றால், இதுபற்றி இனிமேல் தான் விவாதிக்க வேண்டும். கட்சியின் தேர்தல் குழு அதை முறைப்படி பரிசீலிக்கும். அவர்கள் பெயர் பட்டியலில் இணைக்கப்படும். ஆனால் சீட் வழங்குவதை பா.ஜ மத்திய தேர்தல் குழு இறுதி முடிவை எடுக்கும்.
தேர்தல் டிக்கெட்டுகளுக்காக பாஜவில் யாரும் சேரக்கூடாது என்று நாங்கள் தெரிவித்து விட்டோம். இருப்பினும் சீட் கிடைக்க முயற்சி எடுப்பதில் எந்த தடையும் இல்லை. அவர்களின் வாய்ப்புகளின் அடிப்படையில் வழங்கப்படும். அவர்கள் நிபந்தனையின்றி பாஜவில் இணைந்துள்ளனர். பா.ஜவில் புதிய அல்லது பழைய உறுப்பினர்கள் என்று எதுவும் இல்லை.கட்சிக்குள் நாங்கள் அனைவரும் ஒன்றுதான்’ என்றார்.
