×

அமெரிக்கா தாக்குதல் நடத்திய ஈரான் கப்பலை நாங்களும் தேடினோம்: இந்திய கடற்படை அறிவிப்பு

புதுடெல்லி: அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் மூழ்கிய ஈரான் கப்பலில் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை கடற்பகுதிக்கு சென்ற ஈரானிய போர்க்கப்பல் ஐஆர்ஐஎஸ் தேனாவை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நடுக்கடலில் மூழ்கடித்தது. இதில் 87 பேர் பலியானார்கள். இந்த கப்பல் இந்தியப் பெருங்கடலில் மூழ்கியது.

இலங்கையின் பிராந்திய நீர்நிலைகள் அதன் கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்கள் நீண்டுள்ளன. 12 முதல் 200 கடல் மைல்கள் வரை சர்வதேச கடல்சார் சட்டங்கள் பொருந்தும். ஆனால் இலங்கையில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில்ஈரானுக்கு சொந்தமான ஐஆர்ஐஎஸ் தேனா என்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. அங்கு இலங்கை மீட்பு பணியில் ஈடுபட்டது. அதே போல் இந்தியாவும் மீட்பு பணியில் ஈடுபட்டதாக தற்போது தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படை விரைவான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த முயற்சியில் உதவ கடல்சார் ரோந்து விமானங்கள் மற்றும் இரண்டு கடற்படை கப்பல்களை அனுப்பியது என்று இந்திய கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேடல் முயற்சியை மேலும் அதிகரிக்க ஐஎன்எஸ் இக்ஷக் கொச்சியில் இருந்து புறப்பட்டு, காணாமல் போன பணியாளர்களைத் தேடுவதற்காக அப்பகுதியில் உள்ளது. தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளில் இலங்கைத் தரப்புடனான ஒருங்கிணைப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Tags : US ,Indian Navy ,New Delhi ,India ,Sri Lankan ,
× RELATED பல்வேறு மசோதாக்களை நிறுத்திவைத்து...