×

மாநிலங்களவை தேர்தல் பாஜ சார்பில் நிதின் நபின் உட்பட 9 வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தலுக்கான 9 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜ வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் முன்னாள் பாஜ பிரிவு தலைவர் ராகுல் சின்ஹா மற்றும் சட்டீஸ்கர் பிரிவு துணைத் தலைவர் லட்சுமி வர்மா ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் இருந்து போட்டியிடுகின்றனர். அசாம் பொதுப்பணித்துறை அமைச்சர் ஜோகன் மோகன் மற்றும் எம்எல்ஏ தேராஷ் கோவல்லா ஆகியோர் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் பாஜ வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள். இதேபோல் ஒடிசா பாஜ பிரிவு தலைவர் மன்மோஹன் சமல் மற்றும் தற்போதைய மாநிலங்களவை எம்பி சுஜித் குமார் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பீகாரில் இருந்து பாஜ தலைவர் சிவேஷ் குமார், அரியானாவில் இருந்து முன்னாள் மக்களவை எம்பி சஞ்சய் பாட்டியா மற்றும் பீகாரில் பாஜ பொதுச்செயலாளர் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினும் பீகாரில் இருந்து போட்டியிடுகிறார்.

Tags : BJP ,Nitin Nabin ,Rajya Sabha elections ,New Delhi ,West Bengal ,Rahul Sinha ,Chhattisgarh ,vice president ,Lakshmi Verma ,Assam… ,
× RELATED ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேச விமானக் கட்டணங்கள் உயர்வு