×

கல்லூரி மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப்

மேட்டூர், மார்ச் 4: மேச்சேரி அருகே சாத்தப்பாடியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு 145 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். கல்லூரியின் சேர்மன் ஆண்டியப்பன் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், பெண்களை பற்றி சிந்தித்த இயக்கம் திராவிட இயக்கம். பெண்களுக்கு கல்வி உரிமை, சொத்துரிமை, ஓட்டுரிமை, வேலை வாய்ப்பில் உரிமை என்று கூறி அதனை செயல்படுத்தியது திராவிட இயக்கம். கலைஞர் வழியில் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய பல்வேறு திட்டங்ககளை செயல்படுத்தி வருகிறார். மகளிர் பொருளாதார ரீதியாக முன்னேறினால் தான் நாடு முன்னேற்றம் அடையும் என்ற எண்ணத்தில் செயலாற்றி வருகிறார். உலக நாடுகளே பாராட்டும் திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். மின்னல் போல வருபவர்களை எண்ணி ஏமாற வேண்டாம் என்றார். விழாவில் கல்லூரி முதல்வர் சண்முகசுந்தரம், தாசில்தார் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Tags : Mettur ,Satthappadi ,Mecheri ,Minister ,Rajendran ,Collector ,Brindadevi ,
× RELATED நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு