×

நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

சேலம், மார்ச் 3: சேலம் அருகேயுள்ள ஆட்டையாம்பட்டி மணியக்காரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கமலா(50). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி தரப்பினருக்கும் இடையே, நிலத்தகராறு இருந்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தகராறாக மாறியது. இதில் கமலாவை, கார்த்திக், மணிவேல், கமலா ஆகியோர் தாக்கினர். இதில் காயம் அடைந்த கமலா, நைனாம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், கார்த்திக் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Salem ,Kamala ,Attaiampatti Maniakarankad ,Karthi ,
× RELATED இளம்பிள்ளையில் பல்வேறு திட்ட பணிகளுக்கு ரூ.64 லட்சத்தில் பூமி பூஜை