×

நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிய இருவர் கைது

சேலம், மார்ச் 2: சேலம் கல்வராயன் மலையில் 2 நாட்டுத்துப்காக்கிகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள கருமந்துறை கல்வராயன் மலைப்பகுதியில், சிலர் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்து, வேட்டையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், கரியகோயில் இன்ஸ்பெக்டர் (பொ) கமலேஷ் தலைமையிலான போலீசார் நேற்று காலை, கல்வராயன்மலையில் உள்ள குன்னூர் அடியனூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள காபி தோட்டத்துக்குள் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், அடியனூரை சேர்ந்த சந்திரன் (45), ஆண்டி (55) எனத் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கரியகோயில் போலீசில் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : Salem ,Salem Kalvarayan Hill ,Kalvarayan Hill ,Karumandurai ,Vazhappadi ,
× RELATED நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு